ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம். மேலும் ஒருவர் படுகாயம்.
ஜம்மு காஷ்மீர் ராஜோரி செக்டார் கண்டி வனப்பகுதியில் இன்று காலை 7:30 மணியளவில் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதிக்கு ராணுவ குழு ரோந்து பண்யில் ஈடுபட்டிருந்தபோது கடுமையான பயங்கரவாதிகள் தப்பிக்க வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். அதிகாரி உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர், அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு